search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் கொலை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளம்பெண்ணுடன் நடனமாடிய வாலிபரையும் போலீசார் கிராமத்தினரிடம் இருந்து மீட்டனர்.
    • இளம்பெண் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கோ ஹிஸ்தான் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சில வாலிபர்களுடன் நடனம் ஆடும் வீடியோ வெளியானது. இதை பார்த்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஊர் பெரியவர்கள் நடத்திய பஞ்சாயத்தில் அந்த இளம்பெண்ணை கொலை செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொலை செய்தனர்.

    இளம்பெண் கவுரவ கொலை செய்யப்பட்டது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஊர் பஞ்சாயத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு சிறுமியை போலீசார் மீட்டனர்.

    அதே போல் இளம்பெண்ணுடன் நடனமாடிய வாலிபரையும் போலீசார் கிராமத்தினரிடம் இருந்து மீட்டனர். இளம்பெண் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, இளம்பெண்ணை கொலை செய்தவர்கள் மற்றும் பஞ்சாயத்தில் ஆலோசனை செய்தவர்கள், பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தவர்கள் யார் என்பதை கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளோம்" என்றனர்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் கவுரவ கொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கணவன்-மனைவி இடையே கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தகராறு இருந்து வந்தது.
    • மீனாவின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள ஆறாம்பண்ணை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 31). உடைமரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி மீனா (28). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் வீட்டில் இருந்த அரிவாளால் மீனாவை வெட்ட முயன்றார். சுதாரித்துக் கொண்ட அவர் வெளியே ஓடினார். எனினும் ராஜ்குமார் துரத்திச் சென்று வீட்டு வாசலில் வைத்து மனைவியை வெட்டிக் கொன்றார்.

    இது தொடர்பாக முறப்பநாடு இன்ஸ்பெக்டர் தில்லைநாயகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு தப்பி ஓடிய ராஜ்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் ராஜ்குமார் முறப்பநாடு போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    மீனாவின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் மீனா என்னிடம் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீடான மும்பைக்கு சென்றுவிட்டார். பின்னர் உறவினர் சமாதானம் செய்தனர். இதனால் மீண்டும் அவர் என்னுடன் சேர்ந்து வாழ்ந்தார்.

    இந்நிலையில் நடத்தை சந்தேகம் காரணமாக எங்களுக்குள் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் அரிவாளால் மீனாவை சரமாரியாக வெட்டினேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அங்கிருந்து தப்பிய நான் பின்னர் போலீசில் சரணடைந்தேன்.

    இவ்வாறு அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.

    • இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
    • கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிப்பாளையத்தில் அரசு பள்ளி உள்ளது. இங்கு புதிதாக வகுப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்குவதற்காக பள்ளி வளாகத்தில் தகர செட் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று காலை அந்த செட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.

    இதையடுத்து பள்ளி மாணவர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    உடனே இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

    கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கட்டிடப்பணியில் ஈடுபட வந்த பெண்ணா அல்லது மர்மநபர்கள் வேறு எங்காவது இளம்பெண்ணை கற்பழித்து கொன்று இங்கு வந்து போட்டு சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருப்பூரில் மாயமான பெண்களின் விவரம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பள்ளி வளாகத்தில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திய போது சந்தியா மறுத்ததால் வாலிபர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
    • தொடர்ந்து தாசில்தார் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் மணிமேடை தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் சந்தியா(வயது 18). இவர் நெல்லை டவுன் ரதவீதியில் நெல்லையப்பர் கோவில் அருகே உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் சந்தியா வேலைக்கு சென்றபோது அந்த கடையின் அருகே உள்ள கடையில் வேலை பார்த்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள தோப்பூரை சேர்ந்த 17 வயது வாலிபர் அவரை கத்தியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார்.

    இதுதொடர்பாக டவுன் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து நடத்திய விசாரணையில், அந்த வாலிபரும், சந்தியாவும் காதலித்து வந்ததும், 2 மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டதும் தெரியவந்தது. தற்போது மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திய போது சந்தியா மறுத்ததால் அந்த வாலிபர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    இதற்கிடையே சந்தியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.1 கோடி இழப்பீடு, இடம் உள்ளிட்டவை கேட்டு அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊர்வலமாக சென்று பேட்டை ரெயில்வே தண்டவாளம் அருகே மெயின்ரோட்டில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் செய்தனர். இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.

    தொடர்ந்து தாசில்தார் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஆதி திராவிட நலத்துறை துணை கலெக்டர் பெனட் ஆசீர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு வேலை வழங்குவதற்கு அரசிற்கு பரிந்துரை செய்யப்படும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதற்கட்ட நிதியை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனாலும் இன்று 3-வது நாளாக திருப்பணி கரிசல்குளம் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த சந்தியாவின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும், வாலிபர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • இளம்பெண்ணின் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை.

    திருப்பூர்:

    திருப்பூர் பெருமாநல்லூர் ராக்கியாப்பட்டி சுடுகாடு பகுதியில் இன்று காலை இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை மர்மநபர்கள் கழுத்தை நெரித்தும், கட்டையால் அடித்தும் கொன்றதற்கான தடயங்கள் இருந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இளம்பெண்ணின் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. அவர் யார் , எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை கொலை செய்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பார்ப்பதற்கு வடமாநில பெண் போல் உள்ளார். அவரை மர்மநபர்கள் கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கொலை செய்யப்பட்ட பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • முதலில் கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தால் தான் கொலையாளிகள் பற்றி தெரியவரும் என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ஜோடுகுளி பஸ் நிறுத்தம் அருகே புளி சாத்து முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறத்தில் இன்று காலை 11 மணியளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணை மர்மநபர்கள் யாரோ அடித்து கொன்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து உள்ளனர்.

    இதில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் தீப்பிடித்து எரிந்தது. இதை அந்த பகுதியை சேர்ந்த ஒரு ரெயில்வே ஊழியர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். மேலும் தீவட்டிப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

    பின்னர் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பெண்ணின் உடலில் எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் பாதி எரிந்த நிலையில் இளம்பெண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பெண்ணை வேறு எங்காவது இருந்து கடத்தி வந்து கொலை செய்து பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். முதலில் கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தால் தான் கொலையாளிகள் பற்றி தெரியவரும் என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 25-ந் தேதி பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • காணாமல் போன இளம்பெண்ணை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நானக் ராம்குடாவை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் தனது குடும்பத்தினருடன் கோவில் தொட்டி என்ற பகுதியில் வசித்து வந்தார்.

    இளம்பெண் கட்டுமான வேலை செய்து வந்தார். மேலும் அவ்வப்போது பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து கடைகளில் விற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    காணாமல் போன இளம்பெண்ணை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். மனைவியை கண்டுபிடிக்க முடியாததால் இதுகுறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் கட்டுமான பணி நடந்து வரும் கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கட்டிடத்தில் உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது கட்டிடத்தில் கீழ் பகுதியில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் மாயமான இளம்பெண் நிர்வாண நிலையில் பிணமாக மிதந்தார்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் இளம்பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க சென்ற இளம்பெண்ணை மர்ம நபர்கள் கடத்தி வந்து பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து குடிநீர் தொட்டியில் வீசி உள்ளனர். குற்றவாளிகளை தேடி வருகிறோம்.

    பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழு விவரமும் தெரியவரும் என கூறினர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அலங்காநல்லூர் அருகே இளம்பெண்ணை கொன்று உடல் கிணற்றில் வீசினார்.
    • எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையளிகள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குலமங்கலம்-குமாரம் செல்லும் சாலையோரத்தில் உள்ள விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் 1 மணி நேரம் போராடி கயிற்று கட்டிலை கிணற்றில் இறக்கி சடலத்தை மீட்டனர். தொடர்ந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபு ணர்கள் வரவ ழைக்கப்பட்டு பரிசோதனை நடந்தது.

    அப்போது இளம்பெண் கால்கள் மற்றும் இடுப்பில் கயிறு கட்டப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பிரேதத்தை மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    கிணற்றில் அழுகிய நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. அவரை அடையாளம் காண அருகிலுள்ள காவல் நிலையத்தில் காணாமல் போன புகார் உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இளம் பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசி சென்றது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையளிகள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரமிளாவிற்கு திருப்பதியை சிறு வயது முதலே தெரியும் என்பதால் நட்பாக பழகி வந்தனர்.
    • போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருப்பதி பிரமிளாவை லாரியில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், மச்சரெட்டி மண்டலம், நெமலி குட்டா தாண்டாவை சேர்ந்தவர் பிரமிளா (வயது 23). இன்டர்மீடியா படித்து வந்த பிரமிளா படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஐதராபாத்தில் பச்சுப்பள்ளிக்கு வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் பச்சுப்பள்ளியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

    ஏப்ரல் மாதம் பிரமிளாவின் கணவர் திடீரென இறந்து விட்டார். இதையடுத்து பிரமிளா பச்சுப்பள்ளியில் உள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்தார்.

    அப்போது தனது ஊருக்கு பக்கத்து ஊர் ரோட் பாண்டா தாண்டாவை சேர்ந்த திருப்பதி (25) என்பவரை சந்தித்தார்.

    பிரமிளாவிற்கு திருப்பதியை சிறு வயது முதலே தெரியும் என்பதால் நட்பாக பழகி வந்தனர்.

    பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது.

    இந்த நிலையில் திருப்பதியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்தனர்.

    இந்த தகவல் பிரமிளாவிற்கு தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரமிளா திருப்பதிக்கு போன் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்.

    பிரமிளா உயிரோடு இருந்தால் தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே பிரமிளாவை கொலை செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி பிரமிளாவிற்கு போன் செய்து பச்சுப்பள்ளி மெயின் ரோட்டுக்கு நேரில் வந்தால் திருமணம் குறித்து பேசிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

    இதையடுத்து பிரமிளா பச்சுப்பள்ளி மெயின் ரோட்டில் திருப்பதியை சந்தித்தார். அப்போது திருமணம் செய்வது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த திருப்பதி அந்த வழியாக வந்த டேங்கர் லாரி முன்பாக பிரமிளாவை பிடித்து தள்ளினார். இதில் டேங்கர் லாரி பிரமிளா மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது பிரமிளா எதிர்பாராத விதமாக லாரியில் சிக்கி இறந்து விட்டதாக திருப்பதி போலீசாரிடம் தெரிவித்தார்.

    போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருப்பதி பிரமிளாவை லாரியில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.

    • புஷ்பகாந்தன், அவரது மனைவி வசந்தி ஆகியோருக்கும் குமாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
    • வீட்டு முன்பு செருப்பு வைத்த தகராறில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், தியாகராஜபுரம், 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புஷ்பகாந்தன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தி(வயது40). இவர்கள் 2-வது மாடியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    வசந்தி வீட்டு வாசல் முன்பு அட்டை பெட்டியில் செருப்புகளை வைப்பது வழக்கம். இதற்கு எதிர்வீட்டில் வசித்து வரும் குமார் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வசந்தி, வீட்டு வாசலில் அட்டை பெட்டியில் செருப்புகளை போட்டு வைத்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமார் தகராறில் ஈடுபட்டார். இதனால் புஷ்பகாந்தன், அவரது மனைவி வசந்தி ஆகியோருக்கும் குமாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது குமார் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஆத்திரம் அடைந்த குமார் திடீரென புஷ்பகாந்தன் மற்றும் அவரது மனைவி வசந்தியை தாக்கி தள்ளினார். இதில் நிலைதடுமாறிய வசந்தி வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி கீழே வந்து விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த வசந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மோதலில் அவரது கணவர் புஷ்பகாந்தனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இன்று காலை வசந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர் மீரா கொலை வழக்காக மாற்றி குமாரை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    வீட்டு முன்பு செருப்பு வைத்த தகராறில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • மனைவியை கொலை செய்த மதிமன்னன் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேலஆவாரம்பட்டியை சேர்ந்தவர் மதிமன்னன் (வயது28). விவசாய கூலி தொழிலாளியான இவர் முதல் மனைவியை பிரிந்து 2-வதாக பாண்டிச்செல்வி (22) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இன்று காலை சமையல் செய்வது தொடர்பாக மதிமன்னவனுக்கும், பாண்டிச்செல்விக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

    2 பேருக்கும் கடும் வாக்குவாதம் முற்றவே பாண்டிச்செல்வி அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டார். அங்கு வந்த மதிமன்னன் மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மதிமன்னன் வீட்டின் பின்புற காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றார். பின்னர் அங்கிருந்த மனைவி பாண்டிச்செல்வியை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

    இதில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மதிமன்னன் அங்கிருந்து தப்பினார்.

    கொலை குறித்து தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டிச் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மனைவியை கொலை செய்த மதிமன்னன் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • செல்லப்பிரியாவை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பிரியாவை கொலை செய்த அவரது கணவர் விமல், சகோதரர் செல்லப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்கன்முத்தன்பட்டி மெயின் ரோடு 4-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் விமல் (வயது 39). இவரது மனைவி செல்லப்பிரியா (32). விமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். தற்போது ஜாமீனில் வெளியே வந்தார்.

    நேற்று இரவு விமல் மற்றும் செல்லப்பிரியாவின் சகோதரர் செல்லப்பாண்டி (34) ஆகியோர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது செல்லப்பாண்டி தனது தங்கையின் நடவடிக்கை குறித்து விமலிடம் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு விமல் உன் தங்கையை என்னுடன் கேரளாவுக்கு அனுப்பி வை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது தங்கையிடம் செல்லப்பாண்டி எனக்கு சேர வேண்டிய நகையை கொடுத்து விட்டு உன் கணவனுடன் கேரளாவுக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி மற்றும் விமல் ஆகிய 2 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்லப்பிரியாவை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பிரியாவை கொலை செய்த அவரது கணவர் விமல், சகோதரர் செல்லப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

    ×